செம்மணியில் திசைமாறி புதைக்கப்பட்டுள்ள சில என்புத்தொகுதிகள்! இறுதி அறிக்கையில் எழுந்துள்ள சந்தேகங்கள்

Jaffna Sri Lanka Magistrate Court
By Rakesh Nov 21, 2026 12:56 PM GMT
Report

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட அனேகமான என்புத்தொகுதிகள் சாதாரண நடைமுறைக்கு அமைய புதைக்கப்படவில்லை என்பது வெளிப்படையானது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் தெரிவித்துள்ளார்.

செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்டத்தரணிகளின் ஆட்சேபனைகள்

இதன்போது, பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்த தடயவியல் அறிக்கை தொடர்பில் சட்டத்தரணிகள் பலரும் தமது ஆட்சேபனைகளை முன்வைத்தனர். அதற்கு பதில் அளிக்கும் வகையிலையே நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செம்மணியில் திசைமாறி புதைக்கப்பட்டுள்ள சில என்புத்தொகுதிகள்! இறுதி அறிக்கையில் எழுந்துள்ள சந்தேகங்கள் | Some Of The Bones Buried In The Red Rock

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட பல என்புத் தொகுதிகள் அவை சாதாரண நடைமுறைக்கு அமைய புதைக்கப்படவில்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. பல என்புத்தொகுதிகள் திசைமாறி புதைக்கப்பட்டுள்ளன. சில என்புத் தொகுதிகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

அத்துடன், செம்மணிப் புதைகுழி தொடர்பாக ஆரம்பத்தில் பேராசிரியர் ராஜ் சோமதேவ வழங்கிய அறிக்கைகளுக்கும், இறுதியாக வழங்கிய அறிக்கைக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது.

இறுதி அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களை அவர் தனது ஆரம்பகட்ட அறிக்கைகளில் வெளிப்படுத்தாமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

செம்மணி புதைகுழியின் காலத்தை மறைக்க சதி - சட்டத்தரணி குருபரன் 

செம்மணிப் புதைகுழி தொடர்பான காலப்பகுதியை மறைப்பதற்குச் சதித் திட்டங்கள் இடம்பெறுகின்றதா என்ற வலுவான சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது.

செம்மணியில் திசைமாறி புதைக்கப்பட்டுள்ள சில என்புத்தொகுதிகள்! இறுதி அறிக்கையில் எழுந்துள்ள சந்தேகங்கள் | Some Of The Bones Buried In The Red Rock

ஏனெனில், செம்மணிப் புதைகுழி தொடர்பில் கார்பன் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோருகின்றது. அதேநேரம், பேராசிரியர் ராஜ் சோமதேவவும் புதைகுழியின் காலப்பகுதி தொடர்பான ஆய்வுகளுக்குப் பரிந்துரைத்துள்ளார்.

எனவே இந்த இரு தரப்பினரின் நகர்வுக்குப் பின்னால் ஏதோவொரு தொடர்பிருப்பதாக நாம் கருதுகின்றோம். ஆதலால், செம்மணிப் புதைகுழியின் காலப்பகுதியை அறிவதில் நீதிமன்றம் மிகவும் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அத்துடன், பேராசிரியர் ராஜ்சோமதேவவின் அறிக்கையைக் கருத்திற்கொண்டு அடுத்தகட்ட அகழ்வுப் பணியை மேற்கொள்ளாமல் விடக்கூடாது. அகழ்வுப் பணிகள் இடம்பெற வேண்டும்.

புதைகுழியின் நிலக்கீழ் தொடர்பின் அடிப்படையில் இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற வேண்டும். செம்மணிப் புதைகுழி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளில் யாரை நியமிக்க வேண்டும் என்பதைவிட யாரை நியமிக்கக்கூடாது என சிந்திக்க வேண்டிய தேவைப்பாடுகள் தற்போது உள்ளன என சட்டத்தரணி கு.குருபரன் மன்றில் தெரிவித்துள்ளார்.

 செம்மணிப்புதைகுழியில் இருந்து பெருந்தொற்றுக்கு பிற்பட்ட நாணயங்களே மீட்கப்பட்டன - சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் 

செம்மணிப் புதைகுழியில் பெருந்தொற்றால் இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கச் சாத்தியம் உள்ளதாக தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கை வழங்கியுள்ளார். இந்த கருத்தையை அறிக்கையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

செம்மணியில் திசைமாறி புதைக்கப்பட்டுள்ள சில என்புத்தொகுதிகள்! இறுதி அறிக்கையில் எழுந்துள்ள சந்தேகங்கள் | Some Of The Bones Buried In The Red Rock

யாழ்ப்பாணத்தில் கடந்த 1919ஆம் ஆண்டிலேயே பெருந்தொற்றொன்று (அம்மை நோய்) ஏற்பட்டது. ஆனால் 1920ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டகால நாணயங்களே செம்மணிப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டன.

எனவே, இதிலுள்ள வெளிப்படையான முரண்தன்மையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். செம்மணிப் புதைகுழி தொடர்பான காலப்பகுதியை பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்த அறிக்கையின் மூலம் தீர்மானிக்க வேண்டிய அவசியம் நீதிமன்றத்துக்கு இல்லை.

அத்துடன் கார்பன் பரிசோதனை செய்வதையும் நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம். ஏனெனில், மன்னார் உள்ளிட்ட ஒருசில புதைகுழிகள் தொடர்பில் வழங்கப்பட்ட கார்பன் அறிக்கைகள் விசாரணைகள் நீர்த்துப்போகக் காரணமாக அமைந்தன.

எனவே, செம்மணிப் புதைகுழி விடயத்திலும் அவ்வாறு நிலைமை ஏற்படக்கூடாது. மரபணுப் பரிசோதனை மூலமே காலப்பகுதி கண்டறியப்பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.

செம்மணியில் மீட்கப்பட்ட இராணுவ உபகரணம் தொடர்பில் சோமதேவ மௌனித்தமை ஏன்? சிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேல் கேள்வி

செம்மணிப் புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ உறுதியான தகவல் எதையும் குறிப்பிடவில்லை.

ஆயினும் அவரின் அறிக்கையின் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்ட காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் 608 பேர் காணாமல் ஆக்கப்பட்டதுடன், 54 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

செம்மணியில் திசைமாறி புதைக்கப்பட்டுள்ள சில என்புத்தொகுதிகள்! இறுதி அறிக்கையில் எழுந்துள்ள சந்தேகங்கள் | Some Of The Bones Buried In The Red Rock

எனவே இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். அத்துடன், பேராசிரியர் ராஜ்சோததேவ வழங்கிய அறிக்கையில் உள்ள பல விடயங்களுடன் நாங்கள் உடன்படவில்லை.

தனது முன்னைய அறிக்கைகளில் பயன்படுத்திய ஒளிப்படங்களை இறுதியான வெளியிட்ட அறிக்கையில் வேறு கோணங்களில் அவர் பயன்படுத்தியுள்ளார். அவரின் இந்த நடவடிக்கை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

அத்துடன், செம்மணிப் புதைகுழிக்குள் இருந்து இராணுவ உபகரணமொன்றும் மீட்கப்பட்டிருந்தது. அந்த உபகரணத்தை மையப்படுத்தி பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டிருந்தன.

யாழ்ப்பாணத்தில் இராணுவப் பகுதிகளில் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு வெளிப்படையாக உள்ள நிலையில் பேராசிரியர் ராஜ் சோமதேவ அந்த இராணுவ உபகரணம் தொடர்பில் எதுவுமே குறிப்பிடாமை பல கேள்விகளை எழுப்புகின்றது.

அத்துடன், பேராசிரியர் ராஜ் சோமதேவ இறுதியாக வழங்கிய அறிக்கையின் முதல் 17 பக்கங்களே அவரின் பணிக்கும் கடமைக்கும் உரிய விடயங்களாக அமைகின்றன.

ஏனைய விடயங்கள் அவரின் பணிக்கு அப்பாற்பட்ட விடயங்களாகவே அமைந்துள்ளன என சிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேல் குறிப்பிட்டுள்ளார்.  

இந்தோனேசியாவுக்கு அருகில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கைக்கு முக்கிய அறிவுறுத்தல்

இந்தோனேசியாவுக்கு அருகில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கைக்கு முக்கிய அறிவுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவல்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US