சிறைச்சாலை உத்தியோகத்தரின் கையை கத்தியால் வெட்டி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது
ஹிக்கடுவ பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் கையை மன்னா கத்தியால் வெட்டிப் படுகாயப்படுத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இன்றைய தினம் (23.02.2026) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகநபர்கள் 22, 33, 35 மற்றும் 36 வயதுடைய திப்பத்துகொட, ஹொரணை, மொரகஹஹேன மற்றும் புலத்சிங்கள ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளையிடப்பட்ட பொருட்களை பாகங்களாகப் பிரித்து விற்பனை செய்வதற்காக அவற்றை வாங்கித் தவசம் வைத்திருந்த ஒருவரும் இந்த நால்வரில் அடங்குவதாக தெரியவருகிறது.
மீட்கப்பட்ட பொருட்கள்
கொள்ளைச் சம்பவங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட துருப்பிடிக்காத உருக்கினால் செய்யப்பட்ட மன்னா கத்தி மற்றும் திருடப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். இரவு நேர சோதனை பணியின் போது ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தொடர் குற்றச் செயல்கள் அம்பலமாகியுள்ளன.

ஹொரணை நவம் மகா பெரஹெர தினத்தில், இவர்கள் ஹிக்கடுவ பகுதியில் வைத்து சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கி மோட்டார் சைக்கிளைத் திருடியுள்ளனர்.
விசாரணை
பின்னர் அந்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடுகளை மாற்றி கஹதுடுவ, கும்புக, கோனபொல மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள், கைபேசிகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் இன்று (23) ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ஹொரணை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam