லாஃப்ஸ் எரிவாயு விலையில் அதிரடி மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு
வர்த்தக அமைச்சின் தலையீட்டைத் தொடர்ந்து, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 745 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 6,740 ரூபாவாக இருந்த 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,995 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.
விலைக் குறைப்பு
அதேவேளை, 2,720 ரூபாவாக இருந்த 5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலையும் 322 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 2,398 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சின் தலையீட்டின் ஊடாகவே இந்த விலைக் குறைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விலைக் குறைப்பானது லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஓரளவு நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.