குருநாகல் பேருந்து நிலையத்தில் வாளுடன் அட்டகாசம்! சர்ச்சைக்குரிய நபர் அதிரடியாகக் கைது
குருநாகல் பேருந்து நிலையத்திற்கு அருகில் வாளுடன் அட்டகாசத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 15ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒழுங்கீனமான முறை
குறித்த நபர் வாளுடன் ஒழுங்கீனமான முறையில் நடந்துகொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன.
இதனையடுத்து, காணொளி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குருநாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (16) சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
தலாவ, கலபாவெவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின்போது சந்தேகநபரிடம் இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் வாள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (17) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.