இலங்கையர்களுடன் காணாமல் போனதாக கூறப்படும் படகு ரீயூனியன் தீவில் மீட்பு
46 பேருடன் பல மாதங்களாக காணாமல் போயிருந்த தஹாமி துவா என்ற படகு ரீயூனியன் தீவின் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 21ம் திகதி இந்த மீன்பிடி படகு புறப்பட்டதாக கூறப்படுகிறது. ஹலவத்த - அம்பகண்டவில பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரினால் இந்த கப்பல் ஓட்டிச் செல்லப்பட்டுள்ளது.
படகில் தொழில்நுட்ப கோளாறு
பின்னர், ஆழ்கடலில் உள்ள கப்பலுடன் மற்றொரு குழு சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒருசில பெண்களும் சிறு குழந்தைகளும் ஒன்றுசேர்க்கப்பட்ட குழுவில் இருந்தனர்.
சர்வதேச கடலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த படகு கடலில் மிதந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அங்கு கடலில் சென்று கொண்டிருந்த மற்றொரு கப்பலின் குழுவால் ஆகஸ்ட் 16ம் திகதி கப்பல் மீட்கப்பட்டு தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது.
குறித்த படகு மீண்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்த படகு நேற்று மீண்டும் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 46 பேரை ஏற்றிச் செல்லும் இந்த கப்பல் தற்போது ரீயூனியன் தீவின் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.