தென்னிலங்கை அரசியல்வாதியுடன் நெருக்கமானவருக்கு யுவதி கொடுத்த பெரும் அதிர்ச்சி
கொரியாவிலிருந்து தனது மருமகனை அழைத்து வருவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ஆலோசகரான பிக்கு ஒருவரிடம் 72 லட்சத்திற்கும் அதிகமான தொகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பணத்தை கொள்ளையடித்த யுவதி
பிக்கு மற்றும் வாகனத்தின் சாரதியை மயக்கமடைய செய்துவிட்டு பணத்தை கொள்ளையடித்ததாக கூறப்படும் யுவதி ஒருவர் தொடர்பில் விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிக்குவின் மருமகன் கொரியாவில் இருந்து வருவதால், அவரை அழைத்து வருவதற்காக 15ஆம் திகதி சாரதியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பிக்கு சென்றுள்ளார்.
கொரியாவில் இருக்கும் போது பேஸ்புக் மூலம் அறிமுகமான இளம் பெண்ணும் அந்த இளைஞனை வரவேற்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதேவேளை, குறித்த இளைஞன் ஒரு வழக்கில் முன்னிலையாகாதமையால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் விமான நிலைய வெளியேறும் முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பிக்குவின் தகவல்
அங்கு அந்த இளைஞனிடம் இருந்த 27 லட்சத்திற்கும் அதிகமான பணம் இளைஞனின் உறவினரான பிக்குவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பின்னர் தான் மற்றும் சாரதிக்கு பேஸ்புக்கில் அறிமுகமான யுவதி குடிபானம் வழங்கியுள்ளார். அதனை குடித்து சிறிது நேரத்தில் ஒரு வகையான போதை நிலை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போதை நிலை தெளிந்ததாகவும் அந்த யுவதியை தெமட்டகொடையில் இறக்கிவிட்டோம் என பிக்கு தெரிவித்துள்ளார்.
யுவதி இறங்கிய பின்னர் மருமகன் கொடுத்த பணத்தை காணவில்லை என பிக்கு பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
யுவதி குறித்த தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனவும், இது திட்டமிட்ட குற்றக் கும்பலின் செயலா என்பது குறித்து புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.