கொள்ளை சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கைது
மட்டக்களப்பு ஏறாவூரில் வீடு ஒன்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட ஐவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெறுமதிமிக்க தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டவர்களை இன்று (25) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணிடம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட தங்க ஆபரணங்கள்
ஏறாவூர் ஆர்.சி.வீதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் சம்பவதினமான கடந்த 11ஆம் திகதி காலை 11.00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து, இரவு 9.15 மணிக்கு வீடு திரும்பிய போது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் அலுமாரியிலிருந்த 8 கால் பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டிருந்தது.

பொலிஸ் விசாரணை
இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடிட்டதையடுத்து ஏறாவூர் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வை.விஜயராஜ் தலைமையிலான பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின் பின் இன்று (25) மிச்சு நகர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 மற்றும் 45 வயதுடைய பெண்கள் இருவரும் ஆண்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் மீட்பு
இதன்போது கைது செய்யப்பட்ட ஒரு பெண் மற்றும் இரு ஆண்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை மீட்டதுடன், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் 3அரை பவுண் தங்க சங்கிலியை மட்டக்களப்பு நகர் நகைகடை ஒன்றில் அடகு வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, அடகு வைத்திருந்த நகை மீட்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட 8 கால் பவுண் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan