அவசர அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து: வெளியான அறிவிப்பு

SriLankan Airlines United States of America Israel Iran
By Dhayani Feb 28, 2026 11:10 AM GMT
Report

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் அந்தப் பிராந்தியத்திற்கான தமது சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

கட்டார், குவைட், ஈரான் மற்றும் ஜோர்தான் உள்ளிட்ட பதற்றமான பகுதிகளுக்கான விமானப் பயணங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்னர், அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தமது விமான பயணங்களின் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு விமானப் போக்குவரத்து அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.  

முதலாம் இணைப்பு

ஈரான் - அமெரிக்க - இஸ்ரேல் போர் பதற்றத்தை தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்வெளி மூடப்பட்டதால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் தாமதமாகலாம் என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான விமானங்களின் வழித்தடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

திடீர் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம்.. அவசர அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்

திடீர் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம்.. அவசர அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்

 

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலை அடுத்து கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் வான்வெளியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவசர அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து: வெளியான அறிவிப்பு | Srilankan Flights Diverted Due Air Border Closure

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டதால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பல சர்வதேச விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டுள்ளது.

அதன்படி, திட்டமிடப்பட்ட அட்டவணையுடன் ஒப்பிடும்போது விமானங்கள் தாமதமாகலாம் என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு பகுதிகளுக்கு பறக்கும் விமானங்கள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னர் ஈரானிய மற்றும் இஸ்ரேலிய வான்வெளி வழியாக பறந்த விமானங்கள் இப்போது சவுதி அரேபிய வான்வெளி வழியாக திருப்பிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அவசர அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து: வெளியான அறிவிப்பு | Srilankan Flights Diverted Due Air Border Closure

விமானங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டதாலும், விமான நேரங்கள் அதிகரித்ததாலும் தங்கள் இலக்குகளை அடைவதில் குறிப்பிடத்தக்க தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று விமான நிறுவனம் பயணிகளுக்குத் தெரிவிக்கின்றது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் சிவில் விமானப் போக்குவரத்துக்கு தங்கள் வான்வெளியை முழுமையாக மூடியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரிட்டிஷ் ஏர்வேஸ் டெல் அவிவ், பஹ்ரைன் விமானங்களை இரத்து செய்துள்ளது.

விமானங்கள் இரத்து

இதேவேளை,டெல்லி-டெல் அவிவ் வழித்தடத்தில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் திருப்பி விடப்பட்டது.

துருக்கிய ஏர்லைன்ஸ் பல மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்களை இரத்து செய்துள்ளது லெபனான், சிரியா, ஈராக், ஈரான், ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கான விமானங்களை மார்ச் 2 வரை விமான நிறுவனம் இரத்து செய்துள்ளது.

கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளுக்கான திட்டமிடப்பட்ட விமானங்கள் சனிக்கிழமை இரத்து செய்யப்பட்டன.

ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்! பல மாதங்களாக குறிவைத்து தீட்டப்பட்ட இரகசிய திட்டம்

ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்! பல மாதங்களாக குறிவைத்து தீட்டப்பட்ட இரகசிய திட்டம்

மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு

மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US