தங்கம் மீதான ஆசையால் பறிப்போன உயிர்கள்-செய்திகளின் தொகுப்பு
இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 20 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர்.
குறித்த தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதைந்த 20 பேர் தொடர்பில் தகவல் எதுவும் தெரியவரவில்லை. எனினும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக இடம்பெறுகின்றது.
இந்தோனேசியாவில் பல்வேறு இடங்களில் தங்கச் சுரங்கங்கள் உள்ளன. இதில் சில சுரங்கங்களில் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக தங்கம் வெட்டி எடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இந்தோனேசியாவில் மேற்கு கலிமந்தன் மாகாணம் பென்ங்கயங் மாவட்டம் கினண்டி கிராமத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு 20 பேர் தங்கம் வெட்டி எடுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதன்போது எதிர்பாராதவிதமாக சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சுரங்கத்தில் இருந்த 20 பேரும் மண்ணுக்குள் புதைந்ர்துள்ளனர்.
தகவல் தொடர்பு குறைவான பகுதி என்பதால் இந்த விபத்து குறித்து அதிகாரிகளுக்கு நேற்று இரவு தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து ஏற்பட்டு 48 மணி நேரத்திற்கு மேல் ஆனதால் மண்ணுக்குள் புதைந்த 20 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,