ஐ.நா இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ள சவால்!
ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை எவ்வாறு இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப் போகின்றது என்பது சவாலான விடயமாகவே இருக்கும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், “நல்லிணக்கம், மற்றும் பொறுப்புக்கூறலின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார
நெருக்கடியின் மனித உரிமைகள் தாக்கம் உட்பட இலங்கையின் மனித உரிமைகளின்
நிலைமையை கண்காணித்து அறிக்கையிடுவதை மேம்படுத்த இந்த விடயம் கோரப்படுகின்றது.

வெளியிடப்பட்டுள்ள தீர்மானங்கள்
2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக்கான போர் முடிவடைந்த பின்னர், ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் சூனிய வேட்டை தொடரில் இதுவரை வெளியிடப்பட்ட அறிக்கைகளை விட தற்போது வெளியிடப்பட்டுள்ள தீர்மானம் நீளமானது.
இந்த தீர்மானம், நிறைவேற்றப்பட்டால், புதிதாக பதவியேற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு இறையாண்மை கொண்ட இலங்கை நாட்டின் நிர்வாகத்தைக் கண்காணிக்க இடமளிக்கப்படும்.
இலங்கை அரசாங்கத்திற்கான சவால்
இந்தநிலையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் ஊழல் தொடர்பான, விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க ரீசெட் பொத்தானை அரசாங்கம் எவ்வாறு அழுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேற்கத்தைய நாடுகள் இலங்கை மீதான சீனாவின் செல்வாக்கைக் குறைக்க முயல்வதால் மேற்கத்திய தாக்குதலை அசைப்பது இலங்கை அரசாங்கத்துக்கு எளிதான காரியமல்ல.
இதேவேளை இலங்கையை காலணித்துவ நாடாக கொண்டிருந்த பிரித்தானியா, இலங்கையில் நல்ல
மற்றும் கெடுதியான விடயங்களை செய்திருந்த போதும், இலங்கைக்கு எதிரான தற்போதைய
தீர்மானத்தை அந்த நாடே வழிநடத்துகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri