படையினரை ஆபத்தில் ஆழ்த்தி கோடிகளை செலவிடும் ட்ரம்ப்! அடுத்தடுத்து கிளம்பும் எதிர்ப்பு
வெனிசுலா மீதான ட்ரம்பின் நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பானதல்ல என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலையடுத்து வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். மேலும், வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்ய செய்யும் என்று ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
வெனிசுலாவில் பதற்றமான சூழல்
வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் துணை ஜனாதிபதியை தற்காலிக ஜனாதிபதியாக நியமித்து வெனிசுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வெனிசுலா மீதான ட்ரம்பின் நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பானதல்ல.வெனிசுலாவில் டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகள் அமெரிக்காவை பாதுகாப்பானதாகவோ, வலிமையானதாகவோ மாற்றவில்லை.
மதுரோ ஒரு கொடூரமான சர்வாதிகாரி என்பதால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் விவேகமற்றது என்ற உண்மை மாறிவிடாது. இது போதைப்பொருள் அல்லது ஜனநாயகம் பற்றியது அல்ல. இது எண்ணெய் மற்றும் பிராந்திய வலிமையை நிரூபிக்க விரும்பும் டொனால்டு ட்ரம்ப் பற்றியது.
எண்ணெய்க்காக நடத்தப்படும் போர்கள் குழப்பமாக மாறும்
போதைப்பொருள் அல்லது ஜனநாயகம் பற்றி அக்கறை கொண்டிருந்தால், ஒரு போதைப்பொருள் கடத்தல்காரரை மன்னிக்கவோ அல்லது மதுரோவின் கூட்டாளிகளுடன் ஒப்பந்தங்களை தொடர்ந்து கொண்டு, வெனிசுலாவின் நியாயமான எதிர்ப்பை ஒதுக்கி வைக்க மாட்டார்.

டொனால்டு ட்ரம்ப் இராணுவ படைகளை ஆபத்தில் ஆழ்த்தி கோடிகளை செலவிடுகிறார், ஒரு பிராந்தியத்தை சீர்குலைக்கிறார். இந்த காட்சிகளை நாம் முன்பே பார்த்திருக்கிறோம்.
ஆட்சி மாற்றத்திற்காக அல்லது எண்ணெய்க்காக நடத்தப்படும் போர்கள் குழப்பமாக மாறும். அமெரிக்க குடும்பங்கள் அதற்கான விலையை செலுத்த வேண்டியிருக்கும்.
அமெரிக்க மக்கள் இதை விரும்பவில்லை. அவர்கள் பொய்களைக் கேட்டு சோர்வடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.