என்பிபி அரசாங்கம் தொடர்பில் மகிந்த ராஜபக்சவின் பகிரங்க அறிவிப்பு
அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்ப கடுமையான செயற்பாடுகளை முன்னெடுத்த போதும் அது தோல்வியடைந்துள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று (04) கொழும்பில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கடினமாக உழைத்து வருகிறது. சிலர் அதில் நல்லதைக் காண்கிறார்கள், சிலர் கெட்டதைக் காண்கிறார்கள்.ஆனால் நாட்டைக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவை நீக்கும் முடிவு குறித்து எனக்குத் தெரியாது. அது அரசாங்கத்தின் உள் விவகாரமாகும். கல்விச் சீர்திருத்தம் மீண்டும் அரசியல் அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் எதிர்க்கட்சியில் உள்ள சிலர் இதை அரசாங்கத்தின் மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.