ரணில் தொடர்பில் சர்வதேசத்தில் அம்பலப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய தகவல்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை எங்களுக்கு எதிரி என்றே எமக்கு தொலைக்காட்சியில் காட்டினார்கள் என்று சிங்கள இளைஞன் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
மேலும் படிக்க >>> பிரபாகரனை எதிரி என்றே காட்டினார்கள்! எங்களுக்கே இப்படி என்றால் தமிழர்களை எப்படி தாக்கியிருப்பீர்கள்..
2 புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை கொண்டாடும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மாபெரும் விருந்து ஒன்றினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் படிக்க >>> ரணிலின் வெற்றியை விருந்து கொடுத்து கொண்டாடிய நாமல்
3 கொழும்பு காலிமுகத்திடல் கோட்ட கோ கம போராட்ட களத்தில் இருந்து போராட்டகாரர்கள் அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் படிக்க >>> போராட்டகாரர்கள் அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம்:எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம்
4 அரசாங்க ஊழியர்களை பணிக்கு அழைக்கும் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கல் நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>> அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் புதிய அறிவிப்பு
5 எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் முன்னர் அறிவித்த வகையில், நாளை மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க >>> நாளை மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்
6 சிங்கப்பூரில் தற்பொழுது தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
மேலும் படிக்க >>> கோட்டாபய எப்போது இலங்கை திரும்புவார்
7 கடந்த 2007ஆம் ஆண்டில் இலங்கைக்கு உதவ வேண்டாம் என ஜப்பான் அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித்தலைவராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க >>> புதிய ஜனாதிபதி ரணில் தொடர்பில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள சர்ச்சை தகவல்
8 போராட்டத்தை முன்னெடுக்க புலம்பெயர்ந்தோரே உதவியதாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டகாரர்களில் ஒருவரான நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> போராட்டத்தை முன்னெடுக்க புலம்பெயர்ந்தோர் உதவினர்
9 ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியமை குறித்து போராட்டகாரர்கள், சர்வதேச நீதிமன்றம் மற்றும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர்.
மேலும் படிக்க >>> சர்வதேச நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய தயாராகி வரும் போராட்டகாரர்கள்
10 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாக கைது செய்யுமாறு கோரி தென் ஆபிரிக்காவின் மனித உரிமைகள் சட்டத்தரணி மற்றும் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் முன்னாள் நிபுணர் யஸ்மின் சூக்கா தலைமையிலான, சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் (ITJP) சட்டத்தரணிகள், சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்ற முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
மேலும் படிக்க >>> கோட்டாபயவுக்கு இறுகும் பிடி! உடனடியாக கைது செய்க