போராட்டத்தை முன்னெடுக்க புலம்பெயர்ந்தோர் உதவினர்: நடிகை தமிதா அபேரத்ன
போராட்டத்தை முன்னெடுக்க புலம்பெயர்ந்தோரே உதவியதாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டகாரர்களில் ஒருவரான நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
வாராந்த சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
புலம்பெயர்ந்தோர் என்பது என்னவென்று தெரியாதவர்கள் விமர்சிக்கின்றனர்
புலம்பெயர்ந்தோர் என்பது வெளிநாடுகளில் இருக்கும் எமது நாட்டு மக்கள். புலம்பெயர்ந்தோர் என்பது என்னவென்று தெரியாதவர்களே எம்மை விமர்ச்சிக்கின்றனர்.
புலம்பெயர்ந்த சிங்களவர்கள், புலம்பெயர்ந்த தமிழர்களை புலம்பெயர்ந்த மக்கள் என்று கூறுவார்கள். இந்த மக்களே போராட்டத்தை முன்னெடுத்து செல்ல எமக்கு உதவினர்.
எமக்கு தொடர்ந்தும் உதவி வருகின்றனர்
இது எனக்கு தனிப்பட்ட ரீதியில் வழங்கிய உதவிகள் அல்ல. வெளிநாடுகளில் உள்ளவர்களை போல் இலங்கையிலும் போராட்டம் தொடர்பிலான உணர்வுள்ள மக்கள் எமக்கு உதவினர். தொடர்ந்தும் உதவி வருகின்றனர் எனவும் தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.