ரணிலின் வெற்றியை விருந்து கொடுத்து கொண்டாடிய நாமல்
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை கொண்டாடும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மாபெரும் விருந்து ஒன்றினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
விருந்து கொடுத்த நாமல்
இதனையடுத்து அன்று இரவு நாமல் ராஜபக்சவின் வீட்டில் மாபெரும் இராப்போசன விருந்து நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விருந்துபசாரத்தில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தாராம்.
அதன்படி அன்றைய விருந்தில் 137 எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாலை 3 மணி வரை நடைபெற்ற இந்த விருந்தில் பல்சுவை உணவுகளுடன் உற்சாக பாணங்களும் இருந்தனவாம்.
இதேநேரம் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக பகிரங்கமாக தெரிவித்த மொட்டு கட்சியின் பிரேம்நாத் தொலவத்தவும் இந்த விருந்தில் கலந்துகொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.