ராஜபக்சர்கள் மீதான வெறுப்பினால் தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார! ஹேஷா விதானகே எம்.பி. குற்றச்சாட்டு
"நாட்டை வங்குரோத்து நிலைக்குத்தள்ளி மக்களை ஏழ்மையாக்கிய ராஜபக்சக்களுக்கு, மீண்டும் அதிகாரத்தைக் கோருவதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.
கொலன்னாவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
மோசமான நாள்! லெபனான் மீது மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடந்த கால ஊழல்வாதிகள்
"கடந்த கால ஊழல்வாதிகளைச் சிறைக்கு அனுப்புவார்கள் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேறவில்லை.

கடந்த ஒன்றரை வருட கால ஆட்சியில் பல ஊழல், மோசடிகள் இடம்பெற்றுள்ளன. எனினும், அவற்றுக்கு அமைச்சரவை பொறுப்பேற்காமல், அரச அதிகாரிகளே பலியாக்கப்படுகின்றனர்.
மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் மீது முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்." - என்றார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பலர் தயார்
பொருளாதார மீட்சி பற்றி நாமல் ராஜபக்ச பேசுவது வேடிக்கையானது என்று சுட்டிக்காட்டிய ஹேஷா விதானகே, "கோட்டபய ராஜபக்சவின் காலத்தில் நாடு வங்குரோத்து அடைந்தபோது, அந்த அமைச்சரவையில் அனைத்து ராஜபக்சர்களும் அங்கம் வகித்தார்கள். அவர்கள் மீதான வெறுப்பால்தான் மக்கள் அநுரகுமாரவைத் தெரிவு செய்தார்கள்" என்றார்.
2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பலர் இப்போதே தயாராகி வருகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், இந்த நாட்டை வழிநடத்துவதற்கான தகுதியும் முதிர்ச்சியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு மாத்திரமே உண்டு என்றும் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri