அவதானமாக செயற்படவும்..! அரசாங்க ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவுறுத்தல்
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவது குறித்து அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பிரதமர் தலைமையிலான பொதுச்சேவைகள் பராமரிப்புக்கான அமைச்சரவைக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு இணைந்து இதற்கான இடைக்கால வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளன.
முக்கிய அறிவுறுத்தல்
இந்த வழிகாட்டுதல்களில், வீட்டிலிருந்தோ அல்லது பணியிடத்திலிருந்தோ முக்கிய நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட முறைகள் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணிகளில் போது முக்கியமான அரசாங்கத்தரவுகளை ஊழியர்கள் செய்திப்பரிமாற்ற செயலிகள் மூலம் அனுப்பக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தங்களது கடமைகள் தொடர்பான தகவல்களின் பாதுகாப்பைக் கடுமையாகப் பாதுகாக்க, துறைத்தலைவர்கள் நடவடிக்கைகளை எடுக்க கடமைப்பட்டுள்ளார் என்றும் வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ளது.
உத்தியோகபூர்வ சந்திப்புகளுக்கு முதன்மையாக "meet.gov.lk" என்ற டிஜிட்டல் தளம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டங்களை பாதுகாப்பாக நடத்த இதனை பயன்படுத்தலாம் என்றும் கூறுகின்றன.
மின்னணு ஆவணங்கள் மற்றும் கையொப்பங்களைப் பயன்படுத்தல்
மேலும், 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் பரிமாற்றச் சட்டத்தின் கீழ், ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பங்கள் (Scanned Signatures), டிஜிட்டல் கையொப்பங்கள் மற்றும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் பரிமாற்றங்கள் தொடர்பான வழிகாட்டுதல்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் இந்த புதிய வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அரச ஊழியர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துமாறும், தரவுப் பாதுகாப்பு (Data Protection) தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூன்று மொழிகளிலும் உள்ள விரிவான வழிகாட்டல்களை டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://mode.gov.lk/docs/guidelines என்ற முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 2 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri