அரச ஊழியர்களில் ஒரு தரப்பினரின் மேலதிக கொடுப்பனவு சர்ச்சை - ஆரம்பிக்கப்படும் விசாரணை
அஞ்சல் ஊழியர்களில் சிலர் மேலதிக நேர கொடுப்பனவில் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி அஞ்சல் ஊழியர்களில் ஒரு குழுவினர் முறையற்ற விதத்தில் 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகையை மேலதிக நேர கொடுப்பனவாகப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சிவில் சமூக அமைப்பு ஒன்றினால் கடந்த 2025ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முறையான விசாரணை
குறித்த முறைப்பாட்டை பரிசீலித்த பின், அது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் கே.ஜி.லனெரோல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டின் இறுதியில் அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமாரவினால் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை விசாரணைகளின் மூலம் இந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டன.
முறையான விரல் அடையாளப் பதிவு இன்றி பெருமளவிலான ஊழியர்கள் மேலதிக நேரக் கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வாகனப் பராமரிப்பு போன்ற பணிகளின் போது, தேவையற்ற ஊழியர்களின் பெயர்களைப் பட்டியலில் இணைத்தும், வேலை நேரத்தை செயற்கையாக அதிகரித்தும் நிதி கோரப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 12 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri