நானும் தேரரும் ஒன்றாக அறைக்குள் செல்லவில்லை..! 10 கோடி நட்டஈடு கேட்கும் சரத் வீரசேகர
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் கொழும்பிலுள்ள கிங்ஸ்பரி (Kingsbury) நட்சத்திர ஹோட்டலில் முகமூடி அணிந்தபடி சென்றதும், அங்கு தங்கியிருந்ததும் தொடர்பான விவகாரம் கடந்த மாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கஸ்ஸப்ப தேரர், தனது முகத்தை மூடிக்கொண்டு கொழும்பின் பிரதான ஐந்தடுக்கு நட்சத்திர ஹோட்டலான கிங்ஸ்பரிக்குச் சென்றது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இந்நிலையில், தான் சாகும் நிலையில் இருந்ததாகவும், சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு மத்தியில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாலும் மருந்து மற்றும் சிகிச்சை பெற அல்லது ஓய்வுக்காக அந்த ஹோட்டலுக்குச் சென்றதாக கஸ்ஸப்ப தேரர் தெரிவித்தார்.
பின்னர் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்பட்டது. பரவலாக பேசப்பட்டு ஒரு பக்கம் கேலிக்கும் விமர்சனத்திற்கும் கஸ்ஸப்ப தேரர் உள்ளாக்கப்பட்டார்.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,