ஜனாதிபதிக்கு பாதுகாப்பாக வெளியே செல்லமுடியாத நிலை ஏற்படும் - அநுர அரசுக்கு கம்மன்பில எச்சரிக்கை
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது பதிவு செய்யப்பட்டுள்ள பண மோசடி வழக்கு தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் 15 மில்லியன் ரூபா முதலீடு தொடர்பாக நாமல் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.
வழக்கு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்த பண மோசடியானது 'என் கன்சல்டன்ஸ்' நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளானது ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பில் இரண்டு தனியார் வங்கிகளின் கணக்குகளை ஆய்வு செய்து கூடுதல் தகவல்களை பெற புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் இதுவரையில் வழக்கு தொடர்பிலான எந்தவித அறிவித்தல்களும் வெளியிடப்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகள் தொடர்பான மேலதிக விபரங்களை வழங்குகிறது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..
[2CXIFBY]