லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
நாட்டில் மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்தை பராமரிக்கத் தேவையான கையிருப்பு, மாலைத்தீவின் மிதக்கும் சேமிப்புக்கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே மே மாதம் எந்தவித இடையூறும் இன்றி தொடர்ச்சியான விநியோகத்தை மேற்கொள்ள உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
கப்பல்கள் தொடர்பான முறையான திட்டமிடல்
20,000 மெட்ரிக் டொன்கள் எரிவாயுவினை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று ஏற்கனவே தென் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ளதாகவும், மே மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் வாரங்களில் வரவிருக்கும் கப்பல்கள் தொடர்பான முறையான திட்டமிடலும் நடைபெற்று வருவதாகவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
20,000 மெட்ரிக் டொன்கள் எரிவாயு கப்பல் ஏப்ரல் 25 அன்று வந்து சேரும் வகையிலும் திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கமைய ஏப்ரல் மாதத்திற்கு ஆர்டர் செய்யப்பட்ட 38,000 மெட்ரிக் டொன்களில், 7,000 மெட்ரிக் டொன் கொண்ட முதல் எரிவாயு தொகுதி மார்ச் மாத இறுதியில் நாட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 13 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan