மற்றுமொரு புயலின் ஆபத்து குறித்து வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அமைப்பு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என கணிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று இரவு 11.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இது மேலும் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்சாத்தியக்கூறுகள் உள்ளதாக திணைக்களம் எச்சரித்துள்ளது.
மற்றுமொரு புயலின் ஆபத்து
இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலை 11.30 மணியளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புயலாக வலுப்பெற அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

அதன்பின்னர், நவம்பர் 2ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகில் உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை இது சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகம் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், இப் பகுதிகளில் கடல் நிலை மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆழ்கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறிப்பிட்ட கடல் பகுதிகளில் தொழிலில் ஈடுபட்டுள்ள படகுகள் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறு அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு நகருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பௌத்த பிக்குவாக வேடமிட்டு நடைபயணம்! சில மணி நேரங்களிலேயே அம்பலமான மொட்டுக் கட்சி அரசியல்வாதியின் அடையாளம்
you may like this...