செயற்றிட்டம் போர்வையில் பல மில்லியன் ரூபாய் மோசடி..! ஆளுநருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
தற்போதைய வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் யாழ்.மாவட்ட அரச அதிபராக கடமை ஆற்றிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் முறைகேடுகள் உள்ள நிலையில் அவை தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்று(30.10.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வடக்கு மாகாண ஆளுநராக செயற்பட்டுவரும் நாகலிங்கள் வேதநாயகன், 2015 மார்ச் முதல் 2020 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக செயல்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பிலே குறித்த விசாரணையை மேற்கொள்ளுமாறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
குறித்த முறைப்பாட்டில், யாழ் மாவட்ட செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் நிதிமுறைகேடுகளிலும், மோசடிகளிலும் ஈடுபட்டதன் மூலம் பல மில்லியன் அரச நிதி துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதுடன் மோசடிகளும் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளமைக்கான சமர்ப்பிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநருக்கு எதிரான முறைப்பாடு
முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
நா. வேதநாயகன் பொறுப்பின் கீழ், 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பால் விநியோகத்திற்கான வலையமைப்பினை வலுவூட்டுதலும், பாலின் பெறுமதியினை அதிகரித்தலும் - யாழ்.மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கம் - திருநெல்வேலி என்னும் வேலைத்திட்டத்தின் போது 6 மில்லியனுக்கும் அதிகமான பணம் துஸ்பிரயோகம் செயற்படுத்தப்பட்டுள்ளமை.

கடந்த 07.07.2020 ம் திகதிய JF/A/QUE/KAC/VI/03/2020ஆம் இலக்கம் கொண்ட அறிக்கை மூலம் யாழ்.மாவட்ட செயலகத்தின் பிரதான உள்ளக கணக்காய்வாளர் க.கமலரூபன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
i அமைச்சரவை அனுமதி கிடைக்காத அங்கீகாரத்துக்கு நிலையிலேயே நடைமுறைப்படுதப்பட்டுள்ளது.
செயற்திட்டங்களில் இடம்பெற்ற மோசடிகள்
தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவினால் கோரப்பட்ட விபரங்கள் இன்றி மோசடி செய்யும் நோக்கில் உரிய தேவைப்பாட்டுக்கான இயந்திரம் கொள்வனவு செய்யப்படாமல், தனிப்பட்ட தேவைகளை நிறைவு செய்யும் தரகுப் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மோசடியான கொள்வனவு இடம்பெற்றுள்ளது.

உரிய பெறுகை நடைமுறைகளை கடைப்பிடிக்காமையும், உரிய தேவைக்கு பயன்படுத்தப்பட முடியாத இயந்திர சாதனங்களின் கொள்வனவும் லஞ்சம் மற்றும் மோசடி செயற்பாடுகளுக்கவே மேற்கொள்ளப்பட்டுள்ளது உள்ளிட்ட விடயங்கள் ஆதாரங்கள் மற்றும் திகதியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepan அவரால் எழுதப்பட்டு, 31 October, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.