வடமராட்சி காட்டுப் பகுதியில் குற்றத்தடுப்பு பிரிவினரால் கண்டெடுக்கப்பட்ட மர்மப் பொதிகள்
வடமராட்சி - நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 16 kg கேரள கஞ்சா பொதிகள் யாழ் குற்றத்தடுப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சட்ட விரோத கேரள கஞ்சா இன்றைய தினம்(31.07.2026) கொழும்பிற்கு கைமாற்றுவதற்கு இருந்த நிலையில் அரச வேவுச் சேவையினர்(SIS) அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சட்டவிரோத செயல்
இதன் பின்னணியில் பிரபல அரசியல் கட்சியின் பிரதேச சபை உறுபினர் ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதாக சந்தேகிப்படுகிறது.

இந்த வாரம் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பருத்திதுறை - வல்லிபுரம் கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட 250 kg விற்கும் மேற்பட்ட கேரள கஞ்சாவின் சிறு தொகையே நெல்லியடி பிரதேசத்தில் கண்டுபிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சட்டவிரோத செயல் தொடர்பான மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.