சவூதி இளவரசரின் இராஜகீய மன்னிப்பு.. அனோஜனை காப்பாற்ற இருக்கும் வழி சாத்தியமாகுமா!

Sri Lankan Tamils Saudi Arabia Law and Order Social Media
By Sajithra Sep 19, 2026 12:49 PM GMT
Report

சவூதி அரேபியா, இஸ்லாமியச் சட்டமுறையான ஷரியாவின் (Sharia) அடிப்படையிலேயே தனது நீதித்துறையைச் செயல்படுத்துவதாக இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அங்கு மரண தண்டனையானது பிரதானமாக மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

முதலாவதாக, 'கிசாஸ்' (Qisas) எனும் பழிக்குப்பழி சட்டத்தில், நீதியின் கீழ் திட்டமிடப்பட்ட கொலைக் குற்றங்களுக்கு தண்டனை விதிக்கப்படுகிறது; இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இழப்பீட்டுத் தொகையை (Diyya) பெற்றுக்கொண்டு குற்றவாளியை மன்னிக்க முடியும்.

சவூதி அரேபிய சட்டம்..  

இரண்டாவதாக, 'ஹதுத்' (Hudud) பிரிவின் கீழ் மத நூல்களில் வரையறுக்கப்பட்ட தேசத்துரோகம், மதம் மாறுதல் போன்ற குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

சவூதி இளவரசரின் இராஜகீய மன்னிப்பு.. அனோஜனை காப்பாற்ற இருக்கும் வழி சாத்தியமாகுமா! | Sivarasa Anojan Death Sentence Saudi Arabia Law

மூன்றாவதாக, 'தஸீர்' (Tazir) எனும் நீதிபதிகளின் அதிகாரத்திற்குட்பட்ட பிரிவின் கீழ் போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் மத நிந்தனை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு பிரதானமாக வாள் மூலம் தலை துண்டித்தல் முறையிலேயே தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரான சிவராசா அனோஜன், சவூதி அரேபியாவில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வந்தார்.

சமூக வலைத்தளத்தில் அவர் இட்ட பின்னனூட்டலில், இஸ்லாமிய மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான கருத்து ஒன்றை வெளியிட்ட, நிலையில் இவ்விவகாரம் பேசுபொருளானதுடன் கடும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானது. 

அவர் உடனடியாக அக்கருத்தை நீக்கி பகிரங்கமாக மன்னிப்பு கோரிய போதிலும், அது தொடர்பாக சவூதி அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதி நேரடியாகத் தலையிட வேண்டும்! முன்னாள் இராஜாங்க அமைச்சர் கோரிக்கை

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதி நேரடியாகத் தலையிட வேண்டும்! முன்னாள் இராஜாங்க அமைச்சர் கோரிக்கை

இளவரசரின் சிறப்பு அதிகாரம் 

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வழக்கின் ஆரம்ப விசாரணையில் அல்-அஹ்சா (Al-Ahsa) நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதித்தது.

சவூதி இளவரசரின் இராஜகீய மன்னிப்பு.. அனோஜனை காப்பாற்ற இருக்கும் வழி சாத்தியமாகுமா! | Sivarasa Anojan Death Sentence Saudi Arabia Law

எனினும், மேல்முறையீட்டின் போது இந்தத் தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சவூதி சட்டப்படி, மத நிந்தனை தொடர்பான குற்றங்களில் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மன்னிப்பு வழங்க முடியாது என்றாலும், சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இருக்கும் சிறப்பு அதிகாரமான 'இராஜகீய மன்னிப்பு' (Royal Clemency) மூலமாகவோ அல்லது உயர் நீதிமன்ற மேன்முறையீட்டின் மூலமாகவோ தண்டனையைக் குறைக்க முடியும்.

(இராஜகீய மன்னிப்பு (Royal Pardon / Presidential Pardon) என்பது ஒரு நாட்டின் தலைவர் (அரசர் அல்லது ஜனாதிபதி) தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, குற்றவாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் குறைப்பது அல்லது முழுமையாக இரத்து செய்வது ஆகும்.)

சவூதி இளவரசரின் இராஜகீய மன்னிப்பு.. அனோஜனை காப்பாற்ற இருக்கும் வழி சாத்தியமாகுமா! | Sivarasa Anojan Death Sentence Saudi Arabia Law

தற்போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் அரசியல் தலைவர்கள் உடனடியாக தலையிட்டு இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனோஜனின் குடும்பத்தினரும் தங்களது மகனை மீட்டுத் தருமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இலங்கை அரசு சவூதி அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அறிவித்துள்ளது.   

அனோஜன் விவகாரத்தில் அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வு - நியமிக்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரி

அனோஜன் விவகாரத்தில் அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வு - நியமிக்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரி

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Sajithra அவரால் எழுதப்பட்டு, 19 September, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US