அனோஜன் விவகாரத்தில் அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வு - நியமிக்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரி
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பை பெற்று தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், வழங்கப்பட்ட தண்டனையை குறைக்க அரசாங்கம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சவூதி அரேபிய சட்ட விவகாரம்
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்துடன் பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிவராசா அனோஜனுக்கு சட்ட உதவி வழங்குவதற்காக ஐக்கிய அரபு அமீரக தூதரகம் தலையிட்டுள்ளதாகவும், இதற்காக ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நலிந்த ஜெயதிஸ்ஸ மேலும் வெளிப்படுத்தியுள்ளார்.
சவூதி அரேபியாவில் தற்போதுள்ள சட்டத்தின்படி இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.