கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
குருநாகல் - நீர்கொழும்பு வீதியில் மெட்டியகான, தும்மலெவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளும் சிறிய பாரவூர்தியும் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண் உயிரிழப்பு
உயிரிழந்தவர் தம்பதெனிய மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து கரப்பந்து விளையாட்டுத் துறையை சேர்ந்த சாகரிகா லக்மாலி ஹேவகே என்பவராகும்.

மேலும் அவர் வடமேல் மாகாண விளையாட்டு அதிகாரியும், தேசிய கரப்பந்து மற்றும் கடற்கரை கரப்பந்து நடுவராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் அவசரமாக நாடு திரும்பும் ஷிரந்தி ராஜபக்ச! அறுவை சிகிச்சையிலும் சிக்கல்