சிறுவயதிலேயே போதைப்பொருள் பாவனை - 11 வயது சிறுவனின் வீட்டிற்கே சென்ற பொலிஸார்
11 வயது சிறுவன் ஒருவன் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொலிஸாரின் முகநூல் பக்கத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு, பதிவொன்று பகிரப்பட்டுள்ளது.
மேற்படி பதிவில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
11 வயது சிறுவன் ஒருவன் போதைப்பொருள் பயன்படுத்தும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணை ஆரம்பித்துள்ளது.

பொலிஸ் பிரதித் தலைவர் தர்ஷிக குமாரியின் அறிவுறுத்தல்களின் பேரில், தலைமை ஆய்வாளர் நிமாலி பொன்சேகா மற்றும் ஆய்வாளர் கந்தீபன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று(18.09.2026) கணேமுல்லாவில் உள்ள சுமேத மாவத்தையில் குறித்த சிறுவன் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
மேலும், குறித்த சிறுவன், பாதுகாப்பற்ற சூழலில் வளர்வதை அவதானித்த பொலிஸார், பொலிஸ் பாதுகாப்புப் பொறுப்பில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், குறித்த சிறுவனும், அவனது தாயாரும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சிறுவனின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்த பின்னர், மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
வெளிநாடொன்றில் 7 வருடங்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட பெண் - 20000 டொலரை வெகுமதியாக அறிவித்த பொலிஸார்