மோசமான நாள்! லெபனான் மீது மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இஸ்ரேல் மீண்டும் தெற்கு லெபனான் மீது தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.
இந்த தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
மோசமான நாள்
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குவதாகவும், மேலும் 37 பேர் காயமடைந்ததாகவும் லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது மிகவும் மோசமான நாள் என்றும் லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேலும், ஈரான் ஆதரவு குழுவும் குற்றச்சாட்டுகளைப் பரிமாறிக்கொண்ட நிலையில் இது நிகழ்ந்துள்ளது.
இஸ்ரேலியப்படைகள், இஸ்ரேலால் அறிவிக்கப்பட்ட "மஞ்சள் கோட்டிற்குள்" இயங்கி வரும் நிலையில், தெற்கு லெபனானில் "சண்டையின் போது" தனது வீரர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஆறு பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் நான்கு பேர் பலத்த காயமடைந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளது.
நாட்டிற்குள் அச்சுறுத்தல்கள்
இதற்கிடையில், நாட்டிற்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும்போது எந்த நேரத்திலும் நடவடிக்கை எடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்தத்தை மீறி ஹிஸ்புல்லா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 19 வயது இஸ்ரேலிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இந்த நிலைமையை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைக்கு மத்தியில், ஈரான் வெளியுறவு அமைச்சர் நாளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan