அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் யாழ். விஜயம்
பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் கலந்துகொண்ட பெண்கள் சந்திப்பு நிகழ்வு நேற்று உடுவில் கல்லாரை பகுதியில் இடம்பெற்றது.
இதன்போது கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராஜா உடுவில் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்,
கடந்த அரசாங்கங்களைப் போல் அல்லாது எமது அரசாங்கம் கடந்த ஒரு வருடமாக நாடுபட்ட கடன்களை அடைத்து வந்து தற்போது நாட்டை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. ஜனாதிபதி தனக்கு கிடைக்க இருந்த ஓய்வூதியத்தினை திறைசேரிக்கு வழங்கியுள்ளார்.
நமது ஜனாதிபதி நாட்டுக்காக சேவையாற்றுகிறார்
அது போல எனக்கு வழங்கப்பட்ட இரண்டு சொகுசு கார்களை ஏலத்தில் விற்பனை செய்து அந்த பணத்தை அரசாங்கத்தின் தேவைகளுக்கு பயன்படுத்தவுள்ளோம். எனவே பால்மா, சீனி உள்ளிட்ட அடிப்படை உணவுப் பொருட்கள் வரை அனைத்து விதமான விலையினை அரசாங்கமே தீர்மானிக்கின்றது.
எனவே அரசாங்கத்தை பலப்படுத்தி அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்கி புதிய நாட்டின் தலைவரான அநுரகுமார அவர்களை நாம் பலப்படுத்த வேண்டும் அமைச்சர்களாக எமக்கு இரவு ஒரு மணிக்கு அவர் கூட்டங்களை நடத்துவர் அவ்வாறு இரவு பகல் பாராது நமது ஜனாதிபதி நாட்டுக்காக சேவையாற்றுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சாவித்திரி போல்ராஜ்,
நாட்டின் பல்வேறு வகையான பெண்கள் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக மிகவும் அவமானத்துடன் செயற்பட்டு வருகின்றோம்.
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தை மேம்படுத்த பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளேன்.

பெண்களுக்கான பேருந்து நடத்துனர்களாக பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பொலிஸ் நிலையங்களில் அதிகளவான பெண்கள் சேவையில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் பெண்களுக்கானதும் சிறுவர்களுக்கானதுமான சேவைகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வேலைவாய்ப்பினைத் தேடும் வகையிலான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.







Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam