நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட இருவருக்கு சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் வழிமறித்தமை, பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அவரது சாரதி மற்றும் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக பதுளை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பொலிஸாருடன் வாய்த்தர்க்கம்
வழக்கை விசாரித்த பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெய்ராம் ட்ரொட்ஸ்கி, சமிந்த விஜேசிறி மற்றும் சாரதி பந்துல ரத்நாயக்க ஆகிய இரு பிரதிவாதிகளையும் 4 குற்றச்சாட்டுகளுக்கும், அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ரசிக்க கருணாதிலகவை 3 குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளியாகத் தீர்ப்பளித்துள்ளார்.

எனினும், சாரதி பந்துல ரத்நாயக்க உயிரிழந்துள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதியன்று பண்டாரவளை நகரின் வட்டவளைக்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி உள்ளிட்டோர் ஜீப் வண்டிகளில் பயணித்துக்கொண்டிருந்தனர்.
இதன்போது, அவரது ஜீப் வண்டியை பொலிஸ் ஜீப் வொன்று முந்திச் சென்றமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே குற்றச்செயலுக்கான காரணமாக அமைந்தமை வழக்கு விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
சமிந்த விஜேசிறி, ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri