ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு குறித்து மனம் திறந்த மைத்திரி
அரசியல் அமைப்பின் பிரகாரமே, பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சிக்காலத்தில், பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
இந்த பொது மன்னிப்பானது உரிய விதிகளை பின்பற்றி வழங்கப்படவில்லை என தற்பொழுது நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மைத்திரியின் பதில்
இந்த நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரர் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றி தமக்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறு எனினும் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பிலான தனது தீர்மானம் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட வகையில் அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் நடைமுறை
19ஆம் திருத்த சட்டத்தை சட்டத்தின் பிரகாரம் காணப்பட்ட அதிகாரங்களை குறைத்ததாகவும் பதவி காலத்தை குறைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு பின்னர் வந்த அரசாங்கம் 19ஆம் திருத்தச் சட்டத்தில் தம்மால் அகற்றப்பட்ட அதிகாரங்களை மாற்றியமைதத்தாகவும், அதன் பின்னர் மீண்டும் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் தமக்கு எவ்வித கருத்தையும் வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26