நீதியரசர்களின் ஓய்வு வயது உயர்வு திருத்தம் நிராகரிப்பு - நீதி அமைச்சருக்குக் காட்டமான கடிதம்

Sri Lanka Politician Sri Lanka Government Law and Order Harshana Nanayakkara NPP Government
By Rakesh Jul 28, 2026 06:22 AM GMT
Report

இலங்கையில் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை அமைப்பான இலங்கை நீதிச்சேவை சங்கம், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த முன்மொழியப்பட்டுள்ள அரசமைப்புத் திருத்தத் திட்டத்தை முற்றாக நிராகரித்துள்ளது.

இந்த முன்மொழிவு தேவையற்றது மட்டுமன்றி, நாட்டின் நீதித்துறை சுதந்திரம் மற்றும் நடுநிலைமைக்குப் பாரதூரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனக் கூறி, ஒன்பது முக்கிய காரணங்களை முன்வைத்து இந்த சங்கம் தனது எதிர்ப்பை அரசுக்குத் தெரிவித்துள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே சங்கம் இவ்வாறு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

வெற்றிடமாக உள்ள 8 நீதியரசர் பதவிகளையும் நிரப்புங்கள் : அரசிடம் அஜித் பி பெரேரா எம்.பி. வலியுறுத்து

வெற்றிடமாக உள்ள 8 நீதியரசர் பதவிகளையும் நிரப்புங்கள் : அரசிடம் அஜித் பி பெரேரா எம்.பி. வலியுறுத்து

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது, கீழ்மட்டங்களில் பணிபுரியும் தகுதியான இளம் நீதிபதிகளின் தொழில்முறை முன்னேற்றத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்று சங்கம் எச்சரித்துள்ளது.

நீதியரசர்களின் ஓய்வு வயது உயர்வு திருத்தம் நிராகரிப்பு - நீதி அமைச்சருக்குக் காட்டமான கடிதம் | Increase Retirement Age Of Judges Rejected

இது நீதித்துறையின் இயல்பான மறுமலர்ச்சியைத் தடுத்து, பதவிகளில் தேக்கநிலையை உருவாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய சூழலில் இவ்வாறானதொரு திருத்தம் அவசரசரமாகக் கொண்டுவரப்படுவதன் பின்னணியிலுள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் நோக்கங்கள் குறித்தும் இலங்கை நீதிச்சேவை சங்கம் கேள்விகளை எழுப்பியுள்ளது.

நிராகரிப்பதற்கான 9 காரணிகள்

இதற்கமைய,

01. நீதித்துறையின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படும் சாத்தியம்.

02. இளம் நீதிபதிகளின் பதவி உயர்வுகளில் தேக்கநிலை ஏற்படுதல்.

03. திருத்தச் சட்டமுறைகளில் தெளிவான அணுகுமுறை இல்லாமை.

04. நீடிக்கப்பட்ட பதவிக் காலத்தைப் பெறும் நீதியரசர்கள் மீது அரசியல் செல்வாக்கு செலுத்தப்படக்கூடிய அபாயம்.

05. சட்ட ரீதியான ஓய்வுபெறும் விதிகளில் மாற்றம் செய்வதால் ஏற்படும் பிற சிக்கல்கள்.

06. நீதித்துறை அமைப்பின் மீது மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மை பாதிக்கப்படல்.

07. நீதித்துறை சார்ந்த முக்கிய பங்குதாரர்களுடன் பரந்த அளவிலான பேச்சுள் நடத்தப்படாமை.

08. முன்மொழிவு கொண்டுவரப்படும் காலம் மற்றும் அதன் பின்னணியிலுள்ள நோக்கம் குறித்த கவலைகள்.

09. நீதிமன்றங்களின் வழக்குகளை நிர்வகிக்கும் திறன் மற்றும் ஒட்டுமொத்த செயற்பாடுகளில் ஏற்படக்கூடிய தொய்வு.

திருத்தங்களுக்கு எதிரான போராட்டம்

குறுகிய கால நிர்வாக வசதிகளைக் கருத்தில் கொள்ளாமல், நீதித்துறையின் நீண்டகால நலன் மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு சட்டவாக்காளர்களையும் அரசு அதிகாரிகளையும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

நீதியரசர்களின் ஓய்வு வயது உயர்வு திருத்தம் நிராகரிப்பு - நீதி அமைச்சருக்குக் காட்டமான கடிதம் | Increase Retirement Age Of Judges Rejected

அரசமைப்பு ரீதியாக நீதித்துறையில் மாற்றங்களைக் கொண்டுவரும்போது, சட்டச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடனும் விரிவான கலந்தாலோசனைகளை நடத்திய பின்னரே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் அரச நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை உணர்வுபூர்வமான விவாதமாக உருவெடுத்துள்ள நிலையில், நீதித்துறையில் மறைமுகமாகத் தலையிடும் எந்தவொரு முயற்சியும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடும் விமர்சனங்களைச் சந்திக்கும் என்று தெரிவித்துள்ள இலங்கை நீதிச்சேவை சங்கம், தங்களது கவலைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இந்தத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தைத் தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளது.

சர்வதேச நிறுவனத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்! நான்காவது இடத்துக்கு முன்னேற்றம்...

சர்வதேச நிறுவனத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்! நான்காவது இடத்துக்கு முன்னேற்றம்...

நீதிமன்றத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை

நீதிமன்றத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை


2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US