ஈரான் இஸ்ரேல் அடுத்தக் கட்ட மோதல் ஆரம்பம்! கடும் ஆபத்து தொடர்பில் அபாய எச்சரிக்கை..
புதிய இணைப்பு
இன்றிரவு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஒரு எச்சரிக்கையாக அமைந்தன என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது.
இன்று முன்னதாக லெபனான் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிப்பிட்டு, இஸ்ரேலின் ஆக்கிரமிப்புச் செயல்கள் மீண்டும் நிகழ்த்தப்பட்டால், பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளையும் உள்ளடக்கி, மேலதிக பதிலடிகள் விரிவானதாக இருக்கும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.
ஹைஃபாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள ரமத் டேவிட் விமானப்படைத் தளத்தை, பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி குறிவைத்ததாக IRGC கூறியுள்ளது.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டன என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.
ட்ரம்புக்கு அறிவிப்பு
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளை மாளிகை தகவல்களை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகமான பிபிசி இதனை அறிவித்துள்ளது.
தாக்குதலை உறுதிப்படுத்திய ஈரான்
இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
லெபனானின் - பெய்ரூட் பகுதியில் கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று ஈரான், இஸ்ரேல் மீதான தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பல பகுதிகளில் அபாய ஒலி
வடக்கு இஸ்ரேலில் ஈரான் ஏவுகணைகளின் தொடர் தாக்குதலை இடைமறித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மேலும் கூறுகின்றன.
ஈரானிலிருந்து வந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேலிய இராணுவம் இடைமறித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் திங்கட்கிழமை பாடசாலைகள் மூடப்படும் என்று இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே கடுமையான பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் தங்குமிடங்களுக்கு அருகில் இருக்குமாறும், மேலதிக அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியுமாறும் இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஞாயிற்றுக் கிழமை இரவு, ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை கண்றிந்ததாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, வடக்கு இஸ்ரேலில் வசிப்பவர்களுக்கு ஆபத்து தொடர்பான கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக இந்த ஏவுகணை தாக்குதல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இரண்டு ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri