சங்கீதன் கைதில் மறைக்கப்பட்ட ஆபத்தான விவகாரம்! உடைக்கப்படும் மர்ம முடிச்சுகள்..
விடுதலைப் புலிகள் அமைப்பின் எழுச்சிப் பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை கலைஞர் சங்கீதன் விவகாரமானது தற்போது பேசுபோருளாகியுள்ளது.
இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும், அரசியல்வாதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், அவருக்காக பல போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
எந்த அரசு வந்தாலும் பயங்கரவாத சட்டத்தை நீக்க போவதில்லை. அரசியலுக்காக நீக்க போகின்றேன் என்று கூறினாலும் அவர்கள் நீக்குவதற்கு வாய்ப்பில்லை என்பதை உறவுகள் ஞாபகம் வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் சங்கீதனை பிணையில் விடுவிக்க வேண்டுமாக இருந்தாலும் மக்கள் பிரதிநிதிகள் இதனை மேலிடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் மறைக்கப்பட்ட ஆபத்தான விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
முழுமையான தகவல்களுக்கு லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியை காண்க..
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam