யாழ் சொல்லிசைக் கலைஞர் கைது! ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்..

Jaffna Anura Kumara Dissanayaka S. Sritharan Sri Lanka Prevention of Terrorism Act Tamil Singers
By Shadhu Shanker Jun 07, 2026 08:52 AM GMT
Report

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞனை விடுவிக்க கோரி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள உதயநகர் மேற்கு, கிளிநொச்சியை நிரந்தர முகவரியாகக் கொண்ட சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீதனின் விடுதலை தொடர்பான விடயத்தினை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.

சொல்லிசைக் கலைஞர்

தனது இனத்தின் வரலாற்று வலிகளையும். இழப்புகளையும், மன உணர்வுகளையும் இசை மற்றும் பாடல் வழியாக வெளிப்படுத்திய ஓர் இளைஞன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழ் மக்களிடையே மிகுந்த அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

யாழ் சொல்லிசைக் கலைஞர் கைது! ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்.. | Jaffna Rap Singer Sangedhan Sritharan Anura Letter

ஒரு கலைப் படைப்பின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை குற்றமாகக் கருதி, அதற்காக ஓர் இளைஞனின் சுதந்திரம் பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது.

இந்த நாட்டில் தமிழர்கள் எதிர்கொள்ளும் கருத்துரிமைச் சவால்களின் தீவீரத்தையே எடுத்துக்காட்டுவதாக மக்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, தமிழ் மக்களினதும் இளைஞர்களினதும் நம்பிக்கையையும் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பையும் அடித்தளமாகக் கொண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இத்தகைய கைது இடம்பெற்றிருப்பது, தமிழ் மக்களின் மனங்களில் ஆழமான ஏமாற்றத்தையும் நம்பிக்கைச் சிதைவையும் ஏற்படுத்தியுள்ளது.

சமத்துவம், நீதி, ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை முன்னிறுத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் இவ்வாறான நடவடிக்கைகளால் கேள்விக்குள்ளாகின்றன.

தமிழர் ஆயுதப் போராட்டம்

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலங்களில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளும் கூட, தமிழர் ஆயுதப் போராட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாடல்கள், நினைவுகள் மற்றும் அரசியல் குறியீடுகள் காணப்பட்ட சூழல்களில் மக்களின் ஆதரவை நாடியமை மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.

அவ்வாறிருக்க, இன்று ஒரு இளைஞன் பாடல் ஒன்றை வெளியிட்டதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது, சட்டத்தின் பயன்பாடு தொடர்பில் பாரிய முரண்பாடுகளையும் நியாயப்பூர்வமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

யாழ் சொல்லிசைக் கலைஞர் கைது! ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்.. | Jaffna Rap Singer Sangedhan Sritharan Anura Letter

இந்தக் கைது நடவடிக்கை சங்கீதன் என்ற இளைஞனின் தற்போதைய சுதந்திரத்தை மட்டுமல்லாது, அவரது எதிர்காலக் கல்வி, தொழில், சமூக வாழ்வு மற்றும் கலைப் பயணத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

அதேவேளை, அவரது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றமை துயர்மிகுந்த விடயமாகும்.

பாடலை பாடியதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்ய முடியாது –முன்னாள் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

பாடலை பாடியதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்ய முடியாது –முன்னாள் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

தமிழ் மக்களின் மனங்களில்

ஒரு ஜனநாயக நாட்டின் உயரிய பொறுப்பில் அமர்ந்திருக்கும் தாங்கள் சட்டத்தின் ஆட்சியை மதிப்பதோடு மட்டுமல்லாது, நீதியின் உயிரையும் மனிதாபிமானத்தின் விழுமியங்களையும் காக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பையும் சுமக்கின்றீர்கள்.

யாழ் சொல்லிசைக் கலைஞர் கைது! ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்.. | Jaffna Rap Singer Sangedhan Sritharan Anura Letter

இவ்விடயத்தில் மனிதாபிமான அடிப்படையிலும், நல்லிணக்கத்தின் அடிப்படையிலும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமநீதியை உறுதிப்படுத்தும் அடிப்படையிலும் தங்களது நேரடி தலையீட்டின் மூலம், கைது செய்யப்பட்டுள்ள கலைஞர் சங்கீதனுக்கு தங்களது அரசியலமைப்புச் சட்ட அதிகாரங்களின் கீழ் பொது மன்னிப்பு வழங்குவதன் மூலம் உடனடி விடுதலையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இத்தகைய மனிதாபிமானமான தீர்மானமொன்று தமிழ் மக்களின் மனங்களில் நீதியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாது.

இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தையும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கையுண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்! முன்னாள் அமைச்சர் அலி சப்ரி நெகிழ்ச்சி

இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்! முன்னாள் அமைச்சர் அலி சப்ரி நெகிழ்ச்சி

Gallery
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US