வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவருக்கு ஹோட்டல் அறைக்குள் காத்திருந்த அதிர்ச்சி
இத்தாலியில் பல வருடங்களாக பணியாற்றி விட்டு சிறிய விடுமுறைக்காக இலங்கைக்கு வருகை தந்த நபரின் பெருந்தொகை பெறுமதியான தங்க நகை திருடப்பட்டுள்ளது.
சுமார் 40 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பென்டனுடன் கூடிய தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் 26 வயதுடைய இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ தலைமையக பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்க நகை கொள்ளை
வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபரின் மனைவி மற்றும் பிள்ளைகள் அவருடன் இத்தாலியில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவர் சிறிய விடுமுறைக்காக இலங்கை வந்திருந்து, ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
அங்கு அறிமுகமான குறித்த பெண்ணுடன் வென்னப்புவ பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றில் அறையொன்றை முன்பதிவு செய்து கடந்த 15ஆம் திகதி அங்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதி அறைக்கு சென்றதன் பின்னர் இத்தாலியிலிருந்து வந்த நபர், சங்கிலியைக் கழற்றி வைத்துவிட்டு குளியலறைக்குச் சென்றுள்ளார்.
இளம் பெண் கைது
எனினும், அவர் குளியலறையிலிருந்து வெளியே வந்தபோது பெண் அறையில் இல்லாததுடன், அங்கு வந்த விடுதி ஊழியர் ஒருவர் அந்த பெண் அறையிலிருந்து வெளியேறி ஓடிவிட்டார் எனக் கூறியுள்ளார்.

சோதனையிட்ட போது, தங்கச் சங்கிலி காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர் பெண்ணின் கையடக்கத் தொலைபேசிக்குப் பலமுறை அழைப்பு விடுத்த போதிலும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வென்னப்புவ தலைமையக பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
வென்னப்புவ பண்டிரிப்புவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபரான குறித்த பெண், மாரவில வாடிய பிரதேசத்திலும் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.
திருடப்பட்ட தங்கச் சங்கிலியை அடகு நிலையம் ஒன்றில் அடகு வைத்துள்ளதாக அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan