வெளிநாட்டவர் தோற்றத்தில் இலங்கையர் செய்த பெரும் மோசடி அம்பலம்
கொழும்பில் உள்ள நகை வணிக வளாகங்களுக்குள் நகைகள் வாங்குவதாக கூறி நுழைந்து, சுமார் 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டவரின் தோற்றத்தில் ஆறு மொழிகளில் சரளமாக பேசக்கூடிய சந்தேகநபர் காலியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸ் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய நாட்டவர் போல் நடித்து மோசடி
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 2,800 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது இளஞ்சிவப்பு நீலக்கல் வைரங்கள் பதிக்கப்பட்ட ஒரு தங்க மோதிரம் மற்றும் மேலும் பல தங்க நகைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர், கடந்த செப்டெம்பர் மற்றும் இம்மாதத்தில் பலமுறை, தங்க நகைகள் வாங்குவதாகக் கூறி இந்த திருட்டுகளை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர் ஒரு பிரித்தானிய நாட்டவர் போல் நடித்து மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன் பின்னர், அவர் சிறிது நேரம் அங்கேயே தங்கி, ஒரு பிரித்தானிய நாட்டவர் போல் நடித்து நகைகளைப் பரிசோதித்துள்ளார் என்று பொலிஸ் கூறியுள்ளது.