அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வு: அரசுக்கு தவிசாளர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
அரச உத்தியோகத்தர் பணிக்கு அமர்த்தப்படுவது என்பது வெறும் சொல் அல்ல, மாறாக சிறு வயது முதல் அவர்கள் அனுபவிக்கும் போராட்டம் என்றும், அப்படி அரசாங்க வேலையில் இருப்பவர்களின் சம்பள உயர்வு கோரிக்கை என்பது நியாயமானது என்றும் தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளர் வி.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று(24.11.2026) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரச உத்தியோகத்தர்களின் கோரிக்கை
மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
கல்வி சிறந்த ஒரு இடத்தை பிடித்து, சிறுவயது முதல் தங்களை கல்விக்காகவே அர்ப்பணித்த பின்னர், கிடைக்கும் அரச பணி தான் பலரின் கனவாக உள்ளது.

அவ்வாறு கிடைக்கும் அரச பணிகள் பல வருடங்கள் இருந்த தவத்தின் வெளிபாடாகும். இப்படியான சந்தர்ப்பத்தில் மக்களுடைய சேவைகளை முடிந்தவரை இலகுவாக்குவதற்கே இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றது.
முடிந்தவரை அவர்களும் தங்களை அர்ப்பணித்தே சேவையாற்றி வருகின்றார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்.
அரச பணியில் இருப்பவர்களுக்கும் குடும்பங்கள், பிள்ளைகள், தேவைகள் உள்ளிட்ட பலதும் இருக்கின்றன. அவர்களது சம்பள உயர்வினையும் எம் நாட்டு அரசு அக்கறைகொள்ள வேண்டும் என்றார்.