ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களே இன்று வீதியில்..! அரசைக் கடுமையாகச் சாடிய சம்பிக்க ரணவக்க

Sri Lankan Tamils Champika Ranawaka Sri Lanka Politician Sri Lanka Government NPP Government
By Rakesh Nov 24, 2026 08:11 PM GMT
Report

இன்று அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் ஆதரவுடனேயே தற்போதைய ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது என்றும், அப்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்பதை மக்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளனர் என்றும் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

2027 வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுமுன்தினம்(23.11.2026) பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது ஜனாதிபதிக்கும் தற்போதைய அரசுக்கும் எதிரான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுவதாவும் அவர் கூறியுள்ளார்.

ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களே இன்று வீதியில்..! அரசைக் கடுமையாகச் சாடிய சம்பிக்க ரணவக்க | Champika Ranawaka Strongly Criticized Government

அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மற்றும் பொருளாதார, சமூக ரீதியான எதிர்பார்ப்புகளுக்கும் தற்போதைய வரவு - செலவுத் திட்ட யோசனைகளுக்கும் இடையே பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன என்றும், இதன் காரணமாகவே பல்வேறு தரப்பினரும் அதிருப்தியடைந்து வீதியில் இறங்கும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் போராட்ட உரிமைக்கு எதிரானது..

கடந்த காலங்களில் தொழிற்சங்கத் தலைவர்களாகச் செயற்பட்டவர்கள், தற்போது மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் ஒடுக்குவதற்குப் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர் என்றும் சம்பிக்க ரணவக்க கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களே இன்று வீதியில்..! அரசைக் கடுமையாகச் சாடிய சம்பிக்க ரணவக்க | Champika Ranawaka Strongly Criticized Government

கடந்த கால நிலைப்பாடுகளுக்கு முரணான வகையில் செயற்படும் இத்தகைய போக்கு மக்களின் போராட்ட உரிமைக்கு எதிரானதாக அமைந்துள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், மக்களின் அபிலாஷைகளையும் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் புறக்கணித்துச் செயற்படும் அணுகுமுறை தொடருமாயின், எதிர்காலத்தில் மக்கள் எதிர்ப்பு மேலும் தீவிரமடையும் என்பதையே இடம்பெற்ற போராட்டங்கள் தெளிவாக உணர முடிகின்றது என்றார்.

அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வு: அரசுக்கு தவிசாளர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வு: அரசுக்கு தவிசாளர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

ராஜபக்சர்களின் குடும்பத்தினரால் பழிவாங்கப்பட்ட பெண்கள்! மகிந்த உட்பட பலர் கலக்கத்தில்

ராஜபக்சர்களின் குடும்பத்தினரால் பழிவாங்கப்பட்ட பெண்கள்! மகிந்த உட்பட பலர் கலக்கத்தில்


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
நன்றி நவிலல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US