திருமண விளம்பரங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் மூடநம்பிக்கை விளம்பரங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிராக ஊடக ஒழுக்க கோவை (Media Code of Ethics) அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் குறிபிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சமூக ஒழுக்க கோவை அறிமுகம்
இலங்கை சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களைத் தவறான வழியில் இட்டுச் செல்லும் வகையில் மூடநம்பிக்கைகளை விதைக்கும் விளம்பரங்கள் அதிகளவில் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வசியம் உள்ளிட்ட தரம் தாழ்ந்த விளம்பரங்கள் மற்றும் சாதி அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் உள்ளிட்டவை வெளியாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இத்தகைய அம்சங்களுக்கு எதிராக ஊடகங்களுக்கு ஒரு சமூக ஒழுக்கக் கோவையை அறிமுகப்படுத்தும் சட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை கல்வி முறைக்குள் இது குறித்து விஞ்ஞானபூர்வமான புரிதலை வழங்குவதே பொருத்தமான முறையாக இருக்கும் எனவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் குறிபிட்டுள்ளார்.
நெருங்கிய ரஷ்ய இராணுவ விமானங்கள்... பீதியில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த தென் கொரியா News Lankasri
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri