திருகோணமலையில் தொடரும் ராஜபக்சர்களின் ஆதிக்கம் : கஜேந்திரன் குற்றச்சாட்டு
பேரினவாத அரசு எம்மை அடிமைகளாகவே வைத்திருக்கிறது என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என கொண்டு வந்து எங்கள் மாவீரர்களின் அஞ்சலிகளை செலுத்த விடாமல் தடுத்து கொண்டே வருகின்றனர் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் நேற்று(24.11.2026) பகுதியில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பேரினவாத அரசு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிங்கள பேரினவாத அரசு ஆளுகின்ற ஒற்றை ஆட்சி அரசியலமைப்பு ஒழிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி அநுர குமார ஆட்சிக்கு வந்ததும் இனவாதத்தை ஒழிப்பேன் என கூறி தற்போது இரண்டு வருடங்கள் கடந்தும் திருகோணமலையில் ராஜபக்சர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இனவாதம் தொடர்கின்றது.

அண்மையில் தம்பலகாமம் பிரதேச பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளை மொரவெவ பகுதிக்கு கொண்டு சென்ற போது பெரும்பான்மை இனத்தவர்களால் துரத்தி அடிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கால்நடைகளை கொண்டு செல்ல முடியும் என்பதை ஜனாதிபதிக்கு எடுபிடியாக இருக்கின்ற அமைச்சர் ஒருவரே எழுத்து மூலமாகவும் கூட்டத்தில் அனுமதியை வழங்கியுள்ள போதிலும் கால்நடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் பண்ணையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri