30ஆம் திகதி போராட்டம் வெடிக்கும்..! GMOA விடுக்கும் எச்சரிக்கை
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறையும் மருத்துவர்களும் அநீதியாக நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்(GMOA) தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்றுமுன்தினம்(22.11.2026) முதல் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
இதன்போது, மருத்துவர்களுக்கு மாதாந்தம் ரூ.150,000க்கும் அதிகமான சம்பளக் கழிவுகள் விதிக்கப்படுவதாக GMOA தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இது தொடர்பில் மகா சங்கத்தினருக்கு நேற்று(23) பூரணை தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று(24) நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுப் பிரசாரம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதிக்குள் அரசாங்கம் உரிய பதிலை வழங்காவிட்டால், போராட்டங்கள் மற்றும் பணிநிறுத்தம் உள்ளிட்ட தீவிர தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஊடகப் பேச்சாளர் யசித கன்னங்கர எச்சரிக்கை விடுத்துள்ளார்.