மத்ரஸா மாணவனின் மரணம் : மௌலவி உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்
மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் மௌலவி உட்பட 4 சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார்.
நீண்ட சமரப்பணம்
இந்நிலையில், சம்பவத்தில் கைதான மௌலவி உட்பட 30 ,26, 22 மற்றும் 23 வயது மதிக்கத்தக்க 4 சந்தேக நபர்களையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மேலும், கடந்த நீதிமன்ற தவணையின் போது விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான், நீண்ட சமரப்பணத்தின் பின்னர் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் மௌலவி உட்பட 4 சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri