2027 IPL ஏலம்! அதிகபட்ச விலையில் களமிறங்கும் இலங்கை நட்சத்திரங்கள்
2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 1,220 வீரர்கள் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான மதீஷ பதிரண மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் அதிகபட்ச அடிப்படை விலையான இந்திய ரூபாய் 2 கோடிக்கு தங்களைப் பதிவு செய்துள்ளனர்.
ஆரம்பகட்ட ஏலப் பட்டியல்
ESPNcricinfo தகவல்களை மேற்கோள்காட்டி இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
செவ்வாய்க்கிழமை அணிகளுடன் பகிரப்பட்ட ஆரம்பகட்ட ஏலப் பட்டியலில் 939 இந்திய வீரர்களும், 281 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

எனினும், 10 அணிகளிலும் மொத்தமாக 66 வீரர்களுக்கான இடங்களே உள்ளன.
இதில் 25 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆறு இலங்கை வீரர்கள்
இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பென் ஸ்டோக்ஸும் 2 கோடி ரூபாய் அடிப்படை விலையில் ஏலத்தில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மினி ஏலம் எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி இந்தியாவின் கோவாவில் நடைபெறவுள்ளது.

முன்னதாக, புதிய பருவத்திற்கான அணித் தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, ஆறு இலங்கை வீரர்கள் தங்களது முன்னைய அணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மதீஷ பதிரண - வனிந்து ஹசரங்க - பதும் நிஸ்ஸங்க - கமிந்து மெண்டிஸ் - தில்ஷான் மதுஷங்க - துஷ்மந்த சமீர ஆகியோர் விடுவிக்கப்பட்டவர்கள் இந்த நிலையில், பதிரண மற்றும் ஹசரங்க ஆகிய இரு முன்னணி வீரர்களும் மீண்டும் ஐபிஎல் அணிகளில் இடம்பிடிப்பார்களா என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan