சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பாக அவரது சகோதரர் வெளியிட்டுள்ள தகவல்
புதிய இணைப்பு
சாந்தனின் பூதவுடலுக்கு ஞாயிற்றுக் கிழமை இறுதிக் கிரியை இடம்பெறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவரது சகோதரர் மதிசுதன் தெரிவித்துள்ளார்.
அவரது பூதவுடலுக்கு மீள் உடற் கூற்றுப் பரிசோதனை செய்யப் பணிக்கப்பட்டுள்ளதால் இறுதிக் கிரியை இடம்பெறும் திகதியை உறுதிப்படுத்த முடியாதுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜந்தாம் இணைப்பு
சாந்தனின் பூதவுடலானது, நாளையதினமே யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை மற்றும் பயணத்தடை போன்றவையே இந்த தாமதத்திற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, குறித்த பிரேத பரிசோதனை, நீதிபதிகளின் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும் என்பதாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்காம் இணைப்பு
நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள சாந்தனின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு சாந்தனின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதன் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு சாந்தனின் உடலை எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையை அடுத்து சாந்தனின் உடல் கையளிக்கப்பட்ட பின்னரே யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும், அதன் பின்னரே இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சாந்தனின் உடல் பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியிலேயே பொறுப்பானவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் இணைப்பு
கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ள சாந்தனின் உடல் கொழும்பில் உள்ள மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டு, ஒழுங்குகள் செய்யப்பட்டதன் பின்னரே யாழ்ப்பாணத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என சாந்தன் குடும்பத்தார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சாந்தனின் உடலைப் பெற்றுக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சாந்தனின் மைத்துனர் உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத் தந்துள்ளனர்.
இந்தநிலையில், சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அவரது குடும்பத்தார் லங்காசிறிக்கு வழங்கிய தகவலில்,
யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட பின்னர் சாந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படும்.
பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக நாளைய தினம் சாந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டு, நாளை மறுதினம் சாந்தனின் தாயாரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கிரியைகள் நடத்தப்படும்.
மேலும், அங்கு பொது அமைப்புக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோரின் அஞ்சலிக்காக சாந்தனின் உடல் வைக்கப்படும்.
அதன் பின்னர் தகனக் கிரியைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
இரண்டாம் இணைப்பு
சாந்தனின் உடலைத் தாங்கி விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
அங்கிருக்கும் எமது செய்தியாளர் இதனை உறுதிப்படுத்தினார்.
நேரம் - 11:50
இதன் பின்னர் சாந்தனின் உடல் கொழும்பில் இருந்து தரைவழியாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாந்தனின் உடல் யாழ்ப்பாணத்தை சென்றடைந்ததும், அங்குள்ள தனியார் மலர்சாலையில் அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளதாகவும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உடுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாந்தனின் இறுதிகிரியைகள் தொடர்பான தகவல்கள் குறித்து இதுவரை எதுவும் தெரியவிக்கப்படவில்லை.
முதலாம் இணைப்பு
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலை 09.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்படும் என்று இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், காலை 10 மணிக்குப் பிறகுதான் சாந்தனின் பூதவுடல் தாங்கிய விமானம் இலங்கைக்கு புறப்படவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
