மோடியின் இஸ்ரேல் பயணம்: மத்திய கிழக்கில் இந்தியாவின் ராஜதந்திர சோதனை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, காசா போர் தொடங்கிய பிறகு முதன்முறையாக இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இஸ்ரேல் சென்றடைந்துள்ளார்.
இந்தப் பயணத்தின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
அத்துடன் அந்நாட்டு நாடாளுமன்றமான 'கினெசட்டில்' உரையாற்றவும் திட்டமிட்டுள்ளார். பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள்
குறிப்பாக, சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைப் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலின் மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் இந்தியாவிற்கு மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், இந்தப் பயணம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.
பிள்ளையான் - சுரேஸ் சாலேவிற்கு வைக்கப்பட்ட இலக்கு! கைதின் பின்னணியில் உள்ள சதி.. கம்மன்பில பகிரங்க தகவல்
நீண்டகால நட்புறவு
இஸ்ரேலுடன் நெருக்கமான உறவைப் பேணும் அதே வேளையில், ஈரான் மற்றும் பிற அரபு நாடுகளுடனான தனது நீண்டகால நட்புறவை இந்தியா எவ்வாறு சமநிலைப்படுத்தப் போகிறது என்பதே அந்தச் சவாலாகும்.

இந்தியா ஏற்கனவே பாலஸ்தீனக் கொள்கையைக் கைவிட்டுவிட்டதாக உள்நாட்டில் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இந்தப் பயணத்தில் பாலஸ்தீனத் தலைவர்களைச் சந்திக்கும் திட்டம் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரகாஷ்ராஜ் இல்லை.. கில்லி முத்துப்பாண்டி ரோலில் நான் தான் நடிச்சிருக்கணும்: பிரபல நடிகர் பேட்டி Cineulagam
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam