சண்டித்தனம் காட்டிய கோட்டாவுக்கு நடந்தது தெரியும் தானே! சாமர எம்.பியின் எச்சரிக்கை
சண்டித்தனம் காட்டி அரசியல் செய்ய நினைக்க வேண்டாம். சண்டித்தனம் காட்டிய கோட்டாவுக்கு நடந்தது தெரியும் தானே என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம்(25.11.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கோட்டபாயவின் ஆட்சிக் காலத்தில் அவர் ஒரு றவுடியாகத் தான் இருந்தார்.நாங்களும் அந்தக் காலத்தில் அதிகமான றவுடித்தனங்களை காட்டி ஆட்சியை நடத்த முயன்றோம்.ஆனால் அது முடியவில்லை.
அந்த றவுடித்தனங்களைக் காட்டி ஆட்சியை நடத்த முடியாமல் போனவர்கள் தான் பேரே வாவியில் விழுந்தார்கள்.
எங்களைப் போன்றவர்கள் செய்த தவறுகளால் தான் அந்த அரசாங்கம் வேண்டாம் என தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களித்தனர்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தரம் தாழ்ந்து நடப்பவர் அல்ல என்று எமக்கு தெரியும்.ஆனால் சில அமைச்சர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுகின்றனர்.அப்படி பயமுறுத்தி அரசாங்கத்தை நடத்த முடியாது எனக் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரை சுட்டிக்காட்டி உதய கம்மன்பில வெளியிட்ட சர்சைக்குரிய கருத்து
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri