மத்தள விமான நிலையத்தில் குண்டுப் பீதி: விமானம் தீவிர சோதனை
ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 'அசூர் எயார்' நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த பீதியைத் தொடர்ந்து, குறித்த விமானம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, உஸ்பெகிஸ்தானிலிருந்து மத்தள விமான நிலையத்தை வந்தடையவிருந்த மற்றுமொரு விமானம், பாதுகாப்பு காரணங்களுக்காகக் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொஸ்கோவிலிருந்து மத்தள வந்தடைந்த அசூர் எயார் விமானத்தில் இவ்வாறு குண்டு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குண்டுப் பீதியையடுத்து விமானம் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
உஸ்பெகிஸ்தானிலிருந்து மத்தள வரவிருந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.