யாழில் பேருந்து மோதி இளைஞன் படுகாயம்
யாழ். காரைநகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துடன் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் விபத்தில் சிக்கிய இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
பாடசாலை ஒன்றின் மரதன் ஓட்டப்போட்டி இன்று காலை நடைபெற்றது. இதன்போது மரதன் ஓடிய வீரருக்கு உற்சாகம் ஊட்டுவதற்காக அவருக்கு அருகே குறித்த இளைஞன் துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.
சாரதி கைது
இந்நிலையில் மீசாலை பகுதியில் வைத்து அவர் மீது பேருந்து மோதியுள்ளது. இதன்படி விபத்தின் பின்னர் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தென்னை மரத்தையும் மோதியதாக கூறப்படுகிறது.
இதற்கமைய குறித்த இளைஞன் மிகவும் ஆபத்தான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், பேருந்தின் சாரதி சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், யாழ்.சாவகச்சோி - ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிாிழந்துள்ளார்.
இ.போ.ச பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பரணிதரன்(வயது18) என்ற க.பொ.த உயா்தர வகுப்பு மாணவன் படுகாயமடைந்த நிலையில் சாவக்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ,
இந்நிலையில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளார்
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை, சாவகச்சோி பொலிஸாா் மேற்கொண்டுள்ளனா்.
செய்தி - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |